spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிச.04- ல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

டிச.04- ல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

-

- Advertisement -

 

Metro Train - மெட்ரோ ரயில்

we-r-hiring

புயல் காரணமாக, டிசம்பர் 04- ஆம் தேதி பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 04- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக, நாளை (டிச.04) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை, காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மற்றும் இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!

புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (டிச.04) தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ