Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாக ஜனாதிபதியிடம் திமுக புகார்

ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாக ஜனாதிபதியிடம் திமுக புகார்

-

- Advertisement -

சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னரே ஆளுநர் வெளியேறிய சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து தமிழக பிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர்.

Tamil Nadu Legislative Assembly Governor R. Raj Bhavan Clarifies On N  Ravi's Speech | Raj Bhavan Clarifies: தமிழ்நாடு சட்டபேரவையில் அவ்வாறு  நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?: விளக்கம் ...

we-r-hiring

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளாங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினர். அந்த கடிதத்தில் ஆளுநர், அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாகவும் திமுக பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்ததாக தெரிகிறது.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி அரசுக்கு மனபூர்வமான பாராட்டு என்று ஆளுநர் உரை புத்தகத்தில் இருந்ததை தவிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கத்திற்கு மாறாக புதிய சில கருத்துகளை சேர்த்து உரையாற்றினார். இதேபோல், 47வது பக்கத்தில் 64வது அம்சமாக குறிப்பிடப்பட்டு இருந்த பத்தியின் இறுதியில் “சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது” என்ற அம்சங்களை படிப்பதை தவிர்த்தார். அரசின் உரையை படிக்க தவறியுதடன் பேரவை நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கும் முன் ஆளுநர் எழுந்து வெளியேறினார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ