
சென்னை வேளச்சேரியில் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மௌலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை அறிவிக்காத பா.ஜ.க.!
சென்னையில் கனமழை பெய்து நான்கு நாட்களாகியும் வேளச்சேரி பகுதியில் வெள்ளம் முழுவதுமாக வடியவில்லை. இதனிடையே, மழை பாதிப்புத் தொடர்பாக, பேட்டியளித்த அந்த பகுதியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மௌலானா மழை வெள்ளம் என்பது இயற்கை சீற்றம் என்றும் அதை ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!
இந்த நிலையில், வேளச்சேரி- தரமணி சாலையில் உள்ள டான்சி நகர் பகுதியைப் பார்வையிடச் சென்ற எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மழை பாதிப்புகள் தொடர்பாக, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சமாளிக்க முடியாமல், அசன் மௌலானா அவசர, அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.


