Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மறைவு- மோடி இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மறைவு- மோடி இரங்கல்

-

- Advertisement -

முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார்.

சரத்யாதவ்

we-r-hiring

வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய சரத்யாதவ், மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தேர்வு செய்யப்பட்டார். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ், அவரது 22-ஆவது வயதிலேயே அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற வரலாறு கொண்டவர். 1989-ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதில் துணை நின்றவர். சமூகநீதிக்காக குரல் கொடுத்தவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் சரத்யாதவ் ஆவார். 50 ஆண்டுகளுக்கும் கூடுதலான அரசியல் அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியை எதிர்க்க பலரும் அஞ்சிய காலத்தில் ஜே.பி. என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து அரசியல் செய்தவர். ஜே.பி. இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வேட்பாளர், 1981-ஆம் ஆண்டு அமேதி தொகுதி இடைத்தேர்தலில் ராஜிவ்காந்தி முதன்முறையாக போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர் என்பன உள்ளிட்ட பல பெருமைகள் சரத்யாதவுக்கு உண்டு. சரண்சிங், வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற தலைவர்.

அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே சமூகநீதியில் அக்கறை கொண்டவர். நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர். இதற்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பொது வாழ்வில் தனது நீண்ட காலம் எம்.பி., ஆகவும் அமைச்சராகவும் இருந்து புகழ்பெற்றவர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

MUST READ