spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!

ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!

-

- Advertisement -

 

ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!

we-r-hiring

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!

கடந்த அக்டோபர் 25- ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகளை தமிழக காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.09) காலை 07.00 மணியளவில் 8 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், தடயவியல் துறையினருடன் இணைந்து ஆளுநர் மாளிகை முன்பு ஆய்வு நடத்தினர்.

அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!

என்.ஐ. ஏ. அதிகாரிகளின் ஆய்வை அடுத்து, அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

MUST READ