
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்குவதற்கான டோக்கன்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் கிடைக்கப் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியில் நியாய விலைக் கடைக்கு சென்று, நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
டோக்கன் கிடைக்கப் பெறாதவர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள், அதற்கான படிவத்தைப் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!
நிவாரணத் தொகை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வுக் காணும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044- 28592828, 1100 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புக் கொண்டு விவரங்களைக் கேட்டறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.