
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவச் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…
இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார்; பரிசோதனை முடிந்து டிசம்பர் 28- ஆம் தேதி வீடு திரும்புகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே மூன்று வாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 12- ஆம் தேதி வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.