
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த்ரிஷயம் பட கூட்டணியில் வெளியான ‘நேரு’….வசூல் விபரம்!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள், குடும்பத்தினர், தே.மு.தி.க.வின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அவரை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட….. பிக் பாஸ் மேடையில் விஜயகாந்த் குறித்து கமல்!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், “மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் இன்று (டிச.30) முதல் அஞ்சலி செலுத்தலாம். பொதுமக்கள் எப்போதும் வேண்டுமானாலும் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தலாம்; எந்த கட்டுப்பாடும் இல்லை; முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் கேப்டன் விஜயகாந்திற்கு சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை விடுத்திருக்கிறோம். தமிழக அரசிடம் மீண்டும் கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.