spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆங்கில புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து!

ஆங்கில புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து!

-

- Advertisement -

 

we-r-hiring

2024 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???

நம்பிக்கையின் தொடக்கமாக ஆங்கிலப் புத்தாண்டு அமையவிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதேபோல், புத்தாண்டில் புதிய பாதை தெரியும், புதிய வெளிச்சம் பிறக்கும், வெற்றி வசப்படும் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், கூட்டாட்சிக் கொள்கை, மதச்சார்பின்மையைக் காப்போம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார். இன்பங்கள் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் வளரும் ஆண்டாக 2024 மலரட்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக அமையட்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

#Rewind 2023: ‘மடிக்கும் ஸ்மார்ட்போன்கள் முதல் திவாலான விமான நிறுவனம் வரை’- 2023- ல் வணிகம் சார்ந்த நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!

புதுப்பொலிவு, புது வளர்ச்சி, புது சவால்கள், புது வெற்றிகளை எதிர்கொள்வோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

MUST READ