spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -

 

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

we-r-hiring

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் திட்டங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜன.02) காலை 10.00 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசு அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா!

பின்னர், சாலை மார்க்கமாக, கார் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு சென்றுக் கொண்டிருந்த பிரதமருக்கு பொதுமக்கள், பா.ஜ.க.வினர் சாலையின் இருபுறங்களில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, சாலை நெடுகிலும் வரவேற்பு தோரணங்கள், விளம்பர பதாகைகள் மூலம் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணித்தவாறு பொதுமக்களுக்கு கையசைத்து நன்றித் தெரிவித்தார்.

MUST READ