
திருச்சிக்கு இன்று (ஜன.02) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, விமானம், ரயில், சாலை, எண்ணெய், எரிவாயு, கப்பல், உயர்கல்வி உள்ளிட்டத் துறைகளில் 19,850 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்!
திருச்சியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். மதுரை- தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தூரத்திற்கான அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் வழித்தடம் திறக்கப்படுகிறது. இதேபோல், திருச்சி ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை மற்றும் பிற பகுதிகளை இணைக்கும் 5 சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ரூபாய் 9,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்திற்கு ‘Fast Reactor Fuel Reprocessing’ ஆலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!
திருச்சி என்.ஐ.டி. கல்வி நிலையத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய மாணவர் விடுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.


