Homeசெய்திகள்சினிமாவிஜய் மீது செருப்பை வீசிய நபர்... தளபதி மக்கள் இயக்கத்தினர் போலீசிஸ் புகார்...

விஜய் மீது செருப்பை வீசிய நபர்… தளபதி மக்கள் இயக்கத்தினர் போலீசிஸ் புகார்…

-

- Advertisement -
கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நடிகராகவும், தேமுதிக தலைவராகவும் விளங்கிய கேப்டன் விஜயகாந்த், அண்மையில் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். அவருக்கு தமிழகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. இவரின் மறைவு உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்களை பெரிதும் பாதித்துள்ளது. தன்னலம் கருதாத பொது நல வாதியாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் மறைவிற்கு ரசிகர்கள் தொண்டர்கள் என பலரும் தங்களின் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு, அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்களும் விஜயகாந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் தளபதி 68 படப்பிடிப்பில் இருந்தார். கேப்டன் விஜயகாந்தின் மறைவு குறித்த தகவல் அறிந்ததும் விஜயகாந்தை காண தமிழகம் வந்தார். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த இரவு சென்றிருந்தார் நடிகர் விஜய். அப்போது கண்கலங்கியபடி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்யின் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அவரை வெளியேறச் சொல்லி எதிர்ப்புகளும் கிளம்பின. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

MUST READ