- Advertisement -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் இரண்டாம் படை பிரிவின் மைதானத்தில் ரயில்வே உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வில் பங்குபெற சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள்.

மத்திய அரசின் ரயில்வே தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையம் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு உடல் தகுதி தேர்வில் பங்குபெற வடமாநில இளைஞர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது 1000 மீட்டர் ஒட்டப்பந்தயம், பளு தூக்குதல் ஆகிய தேர்வு நடைபெறுகிறது.
நாள் ஒன்றுக்கு 5000 பேர் வீதம் 5 நாட்கள் தேர்வுக்கு 25000 பேர் அனுமதி.
