spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கம்"- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

“மக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கம்”- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

-

- Advertisement -

 

"மக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கம்"- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

we-r-hiring

தமிழகத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் 92.96% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (ஜன.09) காலை 06.00 மணி நிலவரப்படி, விழுப்புரம் கோட்டத்தில் 76.50%, சேலம் கோட்டத்தில் 96.99%, கோவை கோட்டத்தில் 95.48%, கும்பகோணம் கோட்டத்தில் 82.98%, மதுரை கோட்டத்தில் 97.41%, நெல்லை கோட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசுப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணை!

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “தமிழகத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதலமைச்சரின் அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவது தொழிலாளர்களின் உரிமை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ