
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை இன்று (ஜன.09) விசாரிக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!
சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் போது, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தடை விதிக்கக் கோரியும் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்துள்ளார்.
போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்
இந்த முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.