spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் –...

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

-

- Advertisement -

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!பா.ம.க. தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி பாசன மாவட்டங்களில்  குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால்,  அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற  தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன.

நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடு பட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் என்று திமுகவினரே முடிவு செய்கிறார்கள் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

we-r-hiring

MUST READ