உடன்பிறப்பே வா சந்திப்பில் நிர்வாகிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய விதமாக நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜெயம்கொண்டான், பேராவூர் மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் SIR செயல்பாடு குறித்து விசாரித்தார். இதற்கு நிர்வாகிகள் பல இடங்களில் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றும் போது சர்வர் மெதுவாக இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
மேலும், நெல் ஈரப்பத அளவில் ஒன்றிய அரசிடம் தளர்வு கோரிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்டா மாவட்டங்கள் சார்பில் நிர்வாகிகள் நன்றி கூறியதாகவும், ஈரப்பத அளவில் தளர்வு தராத ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வரும் 23 அன்று தஞ்சாவூரிலும், 24 அன்று திருவாரூரிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
104 தொகுதிகளுக்கு பாஜக குறி! உஷாரா இருங்க ஸ்டாலின்! எச்சரிக்கும் பொன்ராஜ்!


