spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் - சென்னை...

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

-

- Advertisement -

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !கும்மிடிப்பூண்டி தொகுதி  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்ணணியை விரிவாக பார்ப்போம்.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். இவர் கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !தனது கட்சி எம்.எல்.ஏ. கொல்லப்பட்டதை  அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படையினர், அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் எனக் கண்டுபிடித்தனர்.

முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1 ம் தேதி கைது செய்தனர். தொடர் துப்பு துலக்கி மார்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமாக வெளிவந்தது. தனிப்படை போலீஸார், 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர்.

கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.

வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் இன்று பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SIR – பயிற்சி இல்லை, ஆப் பழுது: 30 நாள் 100% இலக்கைச் சாதிப்பது எப்படி? – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

MUST READ