spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா?...

பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்வி

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் அடுத்த மாநாடு தேர்தல் மாநாடு தான்: விஜய் பாட்டு மட்டும் தான் பாடுகிறாரே தவிர ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொல்லவில்லை: மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டம் தோல்வி பெற்ற திட்டம் என சீமான் பேட்டியளித்துள்ளாா்.பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்விநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மாவட்டம் பணகுடியில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட இருந்தார். அதற்கு அனுமதி இல்லாததால் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அவர் தங்கி இருந்த விடுதியில் காவல்துறையினர் அவரை வெளியே அனுப்பாமல்  வைத்திருந்தனர். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “பணகுடி மகேந்திரகிரி மலையில் மட்டும் இந்த மாடுகள் மேய்ப்பதில் சிக்கல் இல்லை. மேச்சலுக்கான நிலத்தை அரசு ஆக்கிரமித்து இருந்தால் என்ன செய்வது. பாலுக்கு ஒரு அரசுத்துறை இருக்கிறது. கால்நடைகளை வளர்க்கவே விடக்கூடாது என்று சொன்னால் எதற்கு அந்த துறை. பால் ஆந்திராவிலிருந்து வருகிறது அந்த முதலாளிகளுக்கு லாபம் கொடுக்கவாக துறை இங்கு செயல்படுகிறது. மாடு வளர்க்கக்கூடாது அதிலிருந்து வருமானம் வேண்டுமென்றால் எப்படி?

நாடெங்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. மலையை வெடி வைத்து தகர்க்கலாம், குவாரியாக மலையை வெட்டி செல்லாம். கால்நடை எங்களுக்கு செல்வம். நாங்கள் பேசிய பிறகு தான் பிரதமர் மோடியே இப்போது பேசுகிறார். நான் செல்லக்கூடாது என எனக்கு அனுமதி தர மறுக்கிறார்கள். கேரளாவில் மலைகளை வெட்டி எடுக்க தடை இருக்கிறது என்று வழக்கு இருக்கிறது. கேரளாவின் மலை வளங்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பைசாவிற்கு தாமிரபரணி நதியில் தண்ணீர் எடுக்க அனுமதி கொடுக்கிறீர்கள் என்றால் அதை பற்றி கவலை இல்லை யாருக்கும். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அதிகாரிகள் இப்படிதான் தவறு செய்தார்களா? மதுரை கோவை மெட்ரோ திட்டம் அது தோல்வி பெற்ற திட்டம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. சென்னை தூண் மாநகரம் சிங்கார சென்னை இல்லை.

we-r-hiring

சாராயம் காய்ச்சி விற்பது தவறா? சரியா? ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் நான் வருகிறேன். தமிழ்நாட்டில் குற்றவாளிகள் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறார்கள். அணு உலையின் பெயர் பூங்கா என்று கூறியுள்ளார்கள். ஆட்சி மாற்றம் எப்போது என்ற கேள்விக்கு? நீங்கள் எனக்கு எப்போதாவது வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா. நான் முதலமைச்சராக வந்த பிறகு யாராவது அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் பணியிடை நீக்கமெல்லாம் கிடையாது அவரது கல்வி சான்றிதழை கையெழுத்திட்டு தகுதி இழக்க செய்து பணி நீக்கம் செய்து விடுவேன். புதிதாக கட்சி தொடங்கிய மல்லை சத்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவிற்கு மாற்று அதிமுக இல்லை ஏனென்றால் தீமைக்கு எதிர் தீமை இல்லை.

தீயை அணைக்க தண்ணீர் தேவைப்படுகிறது . அந்த தண்ணீர் யார்? அவர்களுக்கு மாற்று தமிழ் தேசிய அரசியல் பேசக்கூடிய நாங்கள் தானே. தேவைப்பட்டால் இந்தி போன்ற மற்ற மொழிகளை கற்போம். தமிழ் பாய்ச்சு மொழி. என் தம்பி விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடுகிறாரே தவிர அவர் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொல்லவில்லை. பொங்கல் தொகை ஐயாயிரமாக கூட இருக்கலாம் இந்த ஆண்டு. அடுத்த மாநாடு தேர்தல் மாநாடு தான்” என சீமான் கூறினார்.

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

MUST READ