
விண்மீன் வெடிப்புக் குறித்த தரவுகளை இஸ்ரோ முதன்முறையாக சேகரித்துள்ளது.

“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கடந்த ஜனவரி 01- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் உட்பட பல செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு, GSLV C58 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள்கள் புவிச் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவை சேகரித்துள்ளது. குறிப்பாக, விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை இஸ்ரோ முதன்முறையாகச் சேகரித்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே இஸ்ரோ சேகரிக்கும் முதல் தரவுகள் இதுவாகும். தரவுகள் மூலம் மெக்னீசியம், சிலிக்கான், சல்ஃபர், கால்சியம் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்துள்ளது.
50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷா
2024- ஆம் ஆண்டில் இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்தடுத்து, விண்வெளி துறையில் சாதனைகளைப் படைத்தது வருவது உலகின் வல்லரசு நாடுகளை ஆச்சரியமடையச் செய்துள்ளது.