spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே தனியார் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையையொட்டி ஆவடி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று நிலையில், இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

we-r-hiring

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நிறுவனர் அமர்நாத், கல்லூரி தாளாளர் தசரதன்மற்றும் கல்லூரி முதல்வர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துறை வாரியாக பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். அதோடு ரங்கோலி போட்டி, உறியடித்தல், மாட்டுவண்டி பயணம், ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.

மேலும் தமிழர்களின் வீர விளையாட்டுகளான சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக ஈடுப்பட்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரியின் நிறுவனர் அமர்நாத், கல்லூரி தாளாளர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

MUST READ