spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சி... தனுஷ் மீதான மனு தள்ளுபடி

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சி… தனுஷ் மீதான மனு தள்ளுபடி

-

- Advertisement -
கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். வேல்ராஜ் இந்த படத்தை எழுதி,இயக்கி, ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தனுஷின் 25வது படமான இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்ஜினியரிங் முடித்து வேலையில்லாமல் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி இருந்தது. ஆனால், புகை பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என வாகசம் இடம்பெறவில்லை.

இதையடுத்து, படத்தை தயாரித்த ஐஸ்வர்யா மீதும், நடிகர் தனுஷ் மீதும் பொது சுகாதாரத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ததை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே, இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

MUST READ