spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்த ‘கூச முனுசாமி வீரப்பன்’

ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்த ‘கூச முனுசாமி வீரப்பன்’

-

- Advertisement -
ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான கூச முனுசாமி வீரப்பன் தொடர் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தமிழகத்தில் பிறந்த வளர்ந்த எவருக்கும் வீரப்பன தெரியாமல் இருக்க முடியாது. தனிஒரு ஆளாக மொத்த அரசையும், காவல்துறையையும் அளரவிட்டவர் வீரப்பன். அப்படிப்பட்ட, வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் உருவாகியிருக்கும் தொடர் தான் கூச முனுசாமி வீரப்பன். பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஷ்மி ஆகியோர் தயாரிப்பில் ஷரத் ஜோதி இயக்கியிருக்கிறார். இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்

we-r-hiring
மேலும், அவர் பேசும் ரியல் காணொலி ஒன்று இந்த தொடரில் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி இத்தொடர் ஜீ தளத்தில் வெளியானது. உலக அளவில் வெளியான இந்த தொடர் சுமார் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து சாதனை படைத்து உள்ளது. இதன் 2-வது சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அண்மையில் தொடரில் வெளியாகாத காட்சிகளையும் படக்குழு வீடியோவாக வெளியிட்டது.

இந்நிலையில், கூச முனுசாமி வீரப்பன் தொடர் ஓடிடி தளத்தில் இதுவரை படைத்திடாத சாதனையை படைத்திருக்கிறது. இந்திய அளவில் இந்த சீரிஸ் டிரெண்டிங்கில் உள்ளது. அதே சமயம், உலக அளவில் சுமார் 125 மில்லியனுக்கும் அதிகமாக ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து உள்ளது.

MUST READ