spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகண்களைத் திறந்த அயோத்தி குழந்தை ராமர்!

கண்களைத் திறந்த அயோத்தி குழந்தை ராமர்!

-

- Advertisement -

 

கண்களைத் திறந்த அயோத்தி குழந்தை ராமர்!

we-r-hiring

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பின் அகற்றப்பட்டது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது. குழந்தை ராமர் சிலை திறப்பின் போது, கோயில் வளாகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தல்- அ.தி.மு.க. குழு அமைப்பு!

அயோத்தியில் மூலவரான குழந்தை ராமரின் 51 அங்குல சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது. குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் மலர் வைத்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் குழந்தை ராமர் சிலை முன் மனமுருக பிரார்த்தனைச் செய்தார்.

ராமர் கோயில் திறப்பது தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் பாக்கியம்; அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷடை ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரதிஷடை பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!

அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, 11 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி விரதமிருந்து, ராமர் கோயில் பூஜையில் பங்கேற்றுள்ளார்.

MUST READ