spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்!

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்!

-

- Advertisement -

 

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்!

we-r-hiring

75ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதைச் செலுத்தினார்.

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்தி

ஆளுநர் ஏற்றி வைத்த மூவர்ணக் கொடிக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. குடியரசுத் தின விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முப்படை வீரர்கள், காவல்துறை, தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். மிடுக்குடன் பீடு நடைப்போட்ட ராணுவ வீரர்களின் மரியாதையைப் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். அணிவகுப்பைத் தொடர்ந்து பல்வேறு கலைக் குழுக்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி

தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 22 அணிவகுப்பு வாகனங்கள் வலம் வரும். அரசுப் பள்ளிக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

MUST READ