17 வயதுக்கு உட்பட்டவருக்கு தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஆவடி அருகே நடைபெற்று வருகிறது.


குடியரசு தின கோப்பைக்காக நடைபெறும் போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆவடி அலி முகமத் கல்லூரியில் தேசிய அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது.
தேசிய அளவில் 13வது ஆண்டாக நடைபெறும் குடியரசு தின கோப்பைக்காண இப்போட்டியில் நாடு முழுவதும் 8 மாநிலத்தை சேர்ந்த 124 கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியை தமிழ்நாடு பள்ளிகளுக்கான கிரிக்கெட் அசோசியேஷன் தலைவரும் முன்னாள் ஐஜியுமான சொக்கலிங்கம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூடுதல் டிஜிபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

முதல் நாளான இன்று தமிழகம் தெலுங்கானா இடையே பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.
லீக் போட்டி, நாக்கோட் முறையில் 20 ஓவர் ஆட்டம் என நடைபெறவிருக்கும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் வின்னர் மற்றும் ரன்னர்களுக்கு கோப்பை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பாக இப்போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச அளவில் மலேசியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாணவர்களுடன் கிரிக்கெட் மட்டையால் பந்தையடித்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேசிய அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சர்வதேச போட்டியில் பங்கேற்பார்கள். இப்போட்டியை தொடங்கி வைப்பதில் பெருமையாக இருக்கிறது.
மேலும், மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரிதால் தீய பழக்கத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு வெகுவாக குறையும்.
இதற்காக தான் மாணவர்களுக்கிடையே நடைபெறும் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் கலந்து கொண்டேன் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
