spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்"- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!

“பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்”- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!

-

- Advertisement -

 

"பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்"- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!

we-r-hiring

பீகாரில் மாநிலத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் அமைத்த மகா கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த நிதிஷ்குமாரே அதனை உடைத்து வெளியேறினார். இந்தியா கூட்டணி தலைவராக நிதிஷ்குமாரை நியமிக்காததால் ஏற்பட்ட அதிருப்தியால் முறிவு ஏற்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ்குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். நிதிஷ்குமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டு ஆளுநர், புதிய அரசு அமையும் வரை இடைக்கால முதலமைச்சராக இருக்க பீகார் ஆளுநர் நிதிஷ்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.

துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதிஷ்குமார், “ஆளுநரைச் சந்தித்து பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கிவிட்டேன். அரசியல் சூழல் காரணமாகவே லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன். அரசியல் சூழல் காரணமாக மகாபந்தன் கூட்டணி முறிந்துவிட்டது. மகா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன்; பீகாரில் புதிய கூட்டணியை அமைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளில் நான்காவது முறையாக கூட்டணியை நிதிஷ்குமார் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ