கமல், சங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் இந்தியன் 2. இது 1996 இல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் கமலுடன் எஸ் ஜே சூர்யா, சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனிபோன்றோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் 2 உருவாகும் போதே இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்புகளும் பாதி முடிவடைந்துவிட்டன.
பலமுறை இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியான நிலையில் படப்பிடிப்பும் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது.
அந்த வகையில் இப்படத்தை 2024 கோடை விடுமுறை காலத்தை ஒட்டி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படம் மேலும் தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். பெரும்பாலும் சங்கர் இயக்கும் படங்கள் அனைத்தும் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அசால்டாக உலா வருவதை ஹீரோ எதிர்ப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இந்தியன் 2 படத்திலும் லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம்.
எனவே 2024 ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், இப்படத்தால் அரசின் மீது மக்களுக்கு எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட்டுவிட கூடாது என்பதால் படத்தை தேர்தல் முடிந்த பின்னர் திரையிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இச்செய்தியை பற்றிய உண்மைத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- Advertisement -


