
குரூப்- 4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.

விஜய்யின் GOAT படத்தைக் கண்டு கொள்ளாத நெட்ஃபிளிக்ஸ்!
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்- 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 09- ஆம் தேதி காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்- 4 தேர்வு நடைபெறும். குரூப்- 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி கடைசி நாளாகும்.
குரூப்- 4 தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைத் திருத்துவதற்கு வரும் மார்ச் 04- ஆம் தேதி முதல் மார்ச் 06- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
தள்ளிப் போகும் ‘இந்தியன் 2’ ரிலீஸ்….. காரணம் என்ன?
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


