உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளம் நெட்ஃப்ளிக்ஸ். தொடக்கத்தில் பெரிதாக இந்திய படங்களில் கவனம் செலுத்தாமல் பிற மொழி படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால் அதன் பிறகு இந்தியாவில் வலுப்பெற முக்கியத் திரைப்படங்களை வளைத்து போட ஆரம்பித்தது. அதன்படி பல பெரிய ஹீரோக்களில் படங்களை கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து கைப்பற்றியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் பிளாக்பஸ்டர் படங்களை வாங்கிக் கொண்டது. அந்த வகையில் 2024 இல் தெலுங்கில் சலார், புஷ்பா 2, மங்கோ மாஸ் தில்லி ஸ்கொயர், தேவரா என பல தெலுங்கு படங்களில் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் தமிழில் தங்கலான், இந்தியன் 2, விடாமுயற்சி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் GOAT (THE GREATEST OF ALL TIME) திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் இன்னும் வாங்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் GOAT படத்தை கைப்பற்றுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக GOAT படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்க முடிவெடுத்துள்ளதாம் தயாரிப்பு குழு. எனவே நெட்பிளிக்ஸ் 2024 இல் வெளியிட வேண்டிய படங்களை அனைத்தும் வாங்கி விட்டதால் இனி விஜயின் GOAT படத்தை வாங்காதே என கூறப்படுகிறது. ஆகவே GOAT படத்தின் டிஜிட்டல் உரிமையை மற்ற ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் அல்லது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இனிவரும் நாட்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.