

“மக்களவைத் தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும்” என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை. குடியரசுத் தின விழா அணி வகுப்பில் பெண் சக்திகள் குறித்து பறைசாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. மக்களவைத் தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்” என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!
ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


