நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் தேசிய கொடியை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்றி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.


மேலும், சிற்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
நாட்டின் 74 -வது குடியரசு தினத்தில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றுதல், கலை நிகழ்ச்சி நடத்துதல் என கொண்டாடி வருகின்றனர்.
ஆவடி காவல் ஆணையராக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இதில் பரதநாட்டியம், வளைய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடனம் மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அம்பத்தூர் தொழிற்பாட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த உதவிய நபர்கள், திருட்டு கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் காவல் துறையினருக்கு உதவிய நபர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கெளரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமாரி, காவல் துணை ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
