இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் தற்போது சுமார் 33 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடகா நமக்குத் தர வேண்டிய நிலுவை பங்கு சுமார் 90 டி.எம்.சி-ஆக உள்ளது.
எனவே, விடியா தி.மு.க. அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல், கர்நாடகம் நமக்கு தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அழுத்தத்தை தர நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.