

ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறி விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை
கர்நாடகா மாநிலம், தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில் உள்ள பண்டிவால் என்ற இடத்தில் பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து 66 வயதான ராதா என்ற பெண் பயணி, தவறி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி கீழே விழுந்துள்ளார்.
தனது அருகில் குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்த சக பயணிக்கு இடம் கொடுத்துவிட்டு நின்றுக் கொண்டிருந்த ராதா, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி
விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவுச் செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


