spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முலாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

முலாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

-

- Advertisement -

முலாம்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.முலாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
முலாம்பழம் என்பது இயல்பிலேயே இனிப்பு சுவையும் நறுமணமும் உடையது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் கால்சியம் சத்துக்கள், இரும்பு சத்துக்கள், பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இந்த முலாம்பழத்தில் அடங்கியுள்ளது. இந்த முலாம்பழம் ரத்த ஓட்டத்தை சீராக்கும் மலச்சிக்கலை சரி செய்யவும் உதவுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு இந்த முலாம்பழம் உறுதுணையாக இருக்கிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதிலும் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறவும் முலாம்பழம் உதவி புரிகிறது.

we-r-hiring

அது மட்டும் இல்லாமல் முலாம் பழத்தை அதிகம் சாப்பிடுவதனால் இளமையான தோற்றத்தை பெறலாம்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் முலாம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி முதுகெலும்பு வளர்ச்சி போன்றவை நன்றாக இருக்கும்.

மூலநோய் உடையவர்கள் முலாம் பழத்தினை அதிகம் உண்பதனால் மூல நோயை விரைவில் சரி செய்யலாம். முலாம்பழம் செரிமானக் கோளாறுகளை சரி செய்யவும் பசியை தூண்டவும் பயன்படுகிறது .முலாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

முலாம்பழம் கல்லீரல் கோளாறுகளை போக்கும் திறனுடையது. முலாம்பழத்தின் சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண் சரியாகும்.

வெயில் காலங்களில் முலாம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதனால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்கலாம்.

இருப்பினும் இந்த முலாம் பழத்தை சாப்பிடுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுவது நல்லது.

MUST READ