ஜாதிக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜாதிக்காய் என்பது நம் சமையல் அறையில் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். ஆனால் இது ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஜாதிக்காயானது செரிமானத்தை மேம்படுத்தவும், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாலியல் ஆரோக்கியத்திற்கும், சரும பிரச்சனைகளை தீர்க்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஒரு நாளைக்கு ஒரு சிட்டிகை எடுத்துக் கொண்டாலே போதுமானது. அதிகமாக எடுத்தால் குமட்டல், தலை சுற்றல், மாயத் தோற்றம் போன்ற விளைவுகள் ஏற்படும். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பயன்படுத்தும் முறை
- ஜாதிக்காயை பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் அளவு ஜாதிக்காய் பொடியை சூடான நீர் அல்லது ஒரு கப் அளவு பாலில் கலந்து குடித்து வர மனநிலை சாந்தமாகி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
- ஒரு பின்ச் அளவு ஜாதிக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் ஜீரணக் கோளாறு தீரும்.
- சிறிதளவு ஜாதிக்காய் பொடியை சீரகம் மற்றும் சுக்குத்தூளுடன் கலந்து உட்கொண்டாலும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.

- ஜாதிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் தேய்த்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் பாலுடன் கலந்து பேஸ்டாகவும் பயன்படுத்தலாம்.



