spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மிடுக்கான தோற்றம் பெற கடுக்காய் சாப்பிடுங்க…

மிடுக்கான தோற்றம் பெற கடுக்காய் சாப்பிடுங்க…

-

- Advertisement -

கடுக்காய் பொடி பல்வேறு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்றன. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், குடல் கழிவுகளை வெளியேற்றுதல், கல்லீரல் நோய்களைத் தடுத்தல், மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை இந்த கடுக்காய் பொடி நமக்கு அள்ளி வழங்குகின்றன. இதனை வெதுவெதுப்பான நீரில் கலந்தோ அல்லது வேறு முறைகளிலோ உட்கொண்டால் நல்ல பலனை தரும்.மிடுக்கான தோற்றம் பெற கடுக்காய் சாப்பிடுங்க…கடுக்காய் பொடியின் நன்மைகள்:

கடுக்காய் பொடி செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலைப் பாதுகாத்து, மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவுகிறது. உடலிலுள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி, நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

we-r-hiring

சித்த மருத்துவப் பயன்கள்:
சித்த மருத்துவத்தின் படி, இந்த கடுக்காய் பொடியை உட்கொள்வதால் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்த இது பெரிதும் துணைப் புாிகிறது. குறிப்பாக, மாலை நேரத்தில் கடுக்காய் பொடியை உட்கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.

வாத நோய்களைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
  • காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் என்ற முறையில் உட்கொண்டால் அனைத்து நோய்களும் குணமாகும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
  • கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள் நிலக்கடலை அளவு கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து உட்கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை:

  • கடுக்காயின் விதையை நீக்கிவிட்டு, மேல் தோலை மட்டும் பொடி செய்து பயன்படுத்த வேண்டும்.
  • கடுக்காயை பயன்படுத்தும் முன், மருத்துவாின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது சிறந்தது.

கல்லீரலின் பாதுகாவலன் பப்பாளி!

MUST READ