
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். திருக்குறள், கவிதை, ஆங்கிலம் மேற்கோள்களுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். பிரமிள் எழுதிய கவிதை, அமர்த்தியா சென் மேற்கோள் என பட்ஜெட் தாக்கலின் போது உரையாற்றினார். காலை 10.00 மணி முதல் 2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

இந்த நிலையில், தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் குளறுபடி உள்ளது. திமுக அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை; பெரிய திட்டமும் இல்லை என கூறினார்.


