

நம் திராவிட மாடல் அரசின் அடுத்த பாய்ச்சலுக்கான நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ள 2024 – 2025 நிதி நிலை அறிக்கையை வரவேற்று மகிழ்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, ‘தடைகளைத் தாண்டி – வளர்ச்சியை நோக்கி’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 – 2025 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் – வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ரூபாய் – மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி அளவில் வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு, அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் – அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் – கோவையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம்,

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 200 கோடி மதிப்பில் திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் – ஒன்றிய அரசுப்பணிகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய உண்டு உறைவிட விடுதிகள், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வளர்ச்சிக்கு ரூ.440 கோடி, மாற்றுத்திறனாளிகள் – திருநங்கையரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் மானியம் – ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தொழில் துறைக்கு ரூ.2,295 கோடி என சமூகநீதி – மொழி – கல்வி – தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு, நம் திராவிட மாடல் அரசின் அடுத்த பாய்ச்சலுக்கான நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ள 2024 – 2025 நிதி நிலை அறிக்கையை வரவேற்று மகிழ்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


