விஜய் ஆண்டனியின் ரோமியோ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி, படம் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிச்சைக்காரன், ரத்தம், கொலை, உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் வள்ளிமயில், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அதே சமயம் விஜய் ஆண்டனி ரோமியோ என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்க விஜய் ஆண்டனி தனது குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் பட குழுவினர் புதிய போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அதேசமயம் இப்படம் 2024 கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோமியோ படத்தின் செல்லக்கிளி எனும் முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக பல குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.