spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது!

மக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது!

-

- Advertisement -

 

மக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது!
Man-eating tiger caged in Wayanad. File photo: Special arrangement

வயநாடு மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.

we-r-hiring

சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் புல்பல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடிய புலி ஒன்று அந்த பகுதி மக்களைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. கால்நடைகளையும் அடித்து உணவாக்கி வந்தது. அச்சுறுத்தும் புலியைக் கூண்டு வைத்து பிடிக்கும் பணி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. நான்கு இடங்களில் கூண்டுகளை வைத்து புலியைப் பிடிக்க வனத்துறையினர், தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வட்டன்கவிலா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக வன விலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்திற்கு புலியை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

10 நாட்களுக்கும் மேலாகப் போக்குக்காட்டி வந்த புலி சிக்கியதால் கிராம மக்கள் பெருமூச்சு விட்டனர்.

MUST READ