spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

சிறுபான்மையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கேப்டன் மார்வெல் பட நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்….

கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலைப் பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கருடனை வாங்க போட்டி போடும் ஓடிடி தளங்கள்… பட வெளியீட்டுக்கு முன்பே வரவேற்பு…

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபான்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அண்ணாமலைக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு குறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். அத்துடன் அண்ணாமலையின் பேச்சை முழுமை மொழிபெயர்த்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

MUST READ