spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!

அம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!

-

- Advertisement -

 

அம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!

we-r-hiring

கர்நாடகாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உணவகத்தில் இருந்த இளைஞர் அம்மாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

பெங்களூரு ஒயிட் ஃபீல்டு சாலையில் உள்ள குண்டலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இருந்து குமார் அலங்கரித் என்ற இளைஞர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து அவரே தனது எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தோசை ஆர்டர் செய்து அதனை சாப்பிட இருக்கையில் அமர்ந்த போது, தனது தாயார் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவரிடம் பேச உணவகத்திற்கு வெளியே சென்ற போது, அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

தனது தாயே தனக்கு கடவுள் போல் வந்து காப்பாற்றியதாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனிடையே, சம்பந்தப்பட்ட உணவகத்தில் கர்நாடகா மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

MUST READ