spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக ஆளுநருக்கு நாளை வரை அவகாசம்!

தமிழக ஆளுநருக்கு நாளை வரை அவகாசம்!

-

- Advertisement -

 

"பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ஏன்?"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!
Photo: Minister Ponmudy

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு நாளை (மார்ச் 22) ஒருநாள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

செவ்வாழைப்பழம் சாப்பிட இதுதான் சரியான நேரம்!

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று (மார்ச் 21) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, “தமிழக ஆளுநர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்; அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்களில் ஆளுநர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என ஆளுநரிடம் கூறுங்கள்” என்றனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பாகும். பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் கூறியுள்ளது அரசமைப்பு விதிகளுக்கு புறம்பானது. வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று வாதிட்டனர்.

ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை என்பதற்காக அடிப்படை உரிமை மறுப்பு என அரசு கூற இயலாது” என்றார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை நியாயப்படுத்த விரும்பவில்லை” என்றார்.

உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவுச் செய்துக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ” தமிழக ஆளுநர் தரப்பில் இருந்து நாளைக்குள் பதில் வரவில்லை என்றால் கடும் உத்தரவுப் பிறப்பிக்கப்படும். அரசியல் சாசன நடைமுறையைப் பின்பற்ற ஒருநாள் அவகாசம் வழங்குகிறோம். ஆளுநரின் செயல்பாடுகள் எங்களுக்கு கவலை அளிக்கிறது; ஆளுநருக்கு தகுந்த அறிவுரை கூறுங்கள்” என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அறிவுறுத்தினர்.

மேலும், ஆளுநர் அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும்? நாங்கள் கண்களை மூடவில்லை; அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகள் உங்களுடையது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MUST READ