spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!

பெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!

-

- Advertisement -

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னைvsபெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

we-r-hiring

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் நேற்றிரவு மல்லுக்கட்டின. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இப்போட்டியில் ருத்ராஞ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதலாவது போட்டியில் மோதியது இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டூ பிளிஸ்சிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

இதனைடுத்து களமிறங்கிய அணியானது 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்து. அணியின் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சு தரப்பில் முஸ்தாபிஜீர் ரகுமான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கை ஆடிய சென்னை அணியானது, 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அணியின் அதிகபட்சமாக ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும், சிவம் துபே 34 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் ஆட்டநாயகனாக முஸ்தாபிஜிர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ