Homeசெய்திகள்சினிமாமிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் 'சூது கவ்வும் 2' ..... முதல் பாடல் வெளியீடு!

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் ‘சூது கவ்வும் 2’ ….. முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் 'சூது கவ்வும் 2' ..... முதல் பாடல் வெளியீடு!இந்த படம் 2013 இல் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. டார்க் காமெடி ஜானரில் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க படத்தை எஸ்.ஜே அர்ஜுன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றது. பின்னர் அதைத் தொடர்ந்து படக்குழுவினர் டீசரையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டினர்.

we-r-hiring

மேலும் இந்த படம் 2024 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் we are not the same எனும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை நடிகர் விஜய் ஆண்டனி, டி இமான் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

MUST READ