spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

-

- Advertisement -

 

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

we-r-hiring

துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதுபோல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கியது.

இந்த நிலையில், தென் மாவட்டங்கள், சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2,000 கோடியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

ஏற்கனவே வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ