Homeசெய்திகள்சினிமாஅதிரடியாக வெளியான 'வேட்டையன்' ரிலீஸ் அப்டேட்!

அதிரடியாக வெளியான ‘வேட்டையன்’ ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது 170 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதிரடியாக வெளியான 'வேட்டையன்' ரிலீஸ் அப்டேட்! இந்த படத்திற்கு வேட்டையன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்க டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினிக்கு மகனாக பகத் பாஸில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நாகர்கோவில், ஐதராபாத் போன்ற பகுதிகளை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்த படம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று செய்திகள் பரவி வந்தது. அதிரடியாக வெளியான 'வேட்டையன்' ரிலீஸ் அப்டேட்!அதன்படி வேட்டையன் திரைப்படம் 2024 அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ