spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் விளம்பரங்களை வெளியிட அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 15) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் வரும் ஏப்ரல் 17- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் வரும் ஏப்ரல் 17- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ