spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

-

- Advertisement -

 

'மக்களவைத் தேர்தல் 2024'- காலை 11.00 மணி நிலவரம்....தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

we-r-hiring

தமிழகம், புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

‘தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!’

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாலை 06.00 மணிக்கு முன்பு வரிசையில் நின்றவர்கள் டோக்கன்கள் பெற்று வாக்குகளை செலுத்துகின்றனர். காலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

“வாக்களிக்க முடியவில்லை”- நடிகர் சூரி வேதனை!

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது.

பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 04- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

MUST READ